நாட்டில் பயணிகள் சென்ற அரச பேருந்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்து பாரிய விபத்து!

 




இலங்கையில் மற்றுமொரு விபத்து தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் 20இற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

பலாங்கொட - இரத்தினபுரி வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் மீது மரக்கிளை விழுந்தபோது, ​​ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை வீதி ஓரமாக நிறுத்தியமையால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பலாங்கொட போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ,பலாங்கொடை - இரத்தினபுரி வீதியில் தேவலகந்த நோக்கிச் நேற்று சென்றுகொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக பேருந்தின் முன் இருந்த ஒரு மரத்தின் கிளை பேருந்தின் மீது விழவிருந்த நிலையில் ஓட்டுநர் பேருந்தை வீதியின் ஓரத்திற்கு திருப்பி விபத்தைத் தவிர்த்துள்ளார்.

பேருந்து முன்னோக்கிச் சென்றிருந்தால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. பேருந்து சாரதி தனது திறமையால் அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த 20 உயிர்களை காப்பாற்றியுள்ளதாக பலரும் பாராட்டியுள்ளனர்.


பேருந்தின் சாரதியான சரத் சந்திரவன்சவின் திறமையால் பேருந்து மற்றும் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதாக பலாங்கொட போக்குவரத்து சபையின் மேலாளர் தர்ம ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.