யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத் தூதுவர் திரு. சாய் முரளி யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி மதிவதானி விவேகானந்தராஜாவை சந்தித்தார்.
இந்திய அரசு ஆதரவு வழங்கும் திட்டங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடமாகாணத்தில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், அந்தப் பகுதிகளின் முன்னேற்றத்திற்கு மேலும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பதையும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
யாழ்ப்பாணத்தில் செயற்படுத்த இருக்கும் எதிர்காலக் திட்டங்களை மேயர் பகிர்ந்தார். இதனை வரவேற்த்த துணை தூதுவர் யாழ்ப்பாண மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்பதை மறுபடியும் உறுதி அளித்தார்.