இந்த நிலையானது குடும்ப நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு மாத்திரம் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 12,198 குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் உதவி கோருபவர்களில் 91சதவீதமானவர்கள் பெண்கள் எனவும், 9 சதவீதமானவர்கள் மட்டுமே ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.