அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் விதமாக நேற்றையதினம் ஈரான் கட்டாரிலுள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது.
அதனை தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்த நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாக்குதலை முன்னரே அறிவித்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி கூறியுள்ளார்.
இந்தநிலையில், ஈரானிலுள்ள ஆட்சியாளர்களால் ஆபத்து இருக்கின்றது என்ற குற்றச்சாட்டு உலகளாவிய ரீதியில் முன்வைக்கப்படுகின்றதாக கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி.