ஈரானின் உச்ச தலைவரின் மறைவிடம் தெரியும்! ஆனால், தற்போது கொல்லப்போவதில்லை !
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால்...
பொறுமை அற்றுப்போகிறது - டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!
ஈரானின் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் இருப்பிடம் குறித்த துல்லியமான தகவல்கள் அமெரிக்காவிடம் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மைய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
2025 ஜூன் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உரையாற்றிய டிரம்ப், "ஈரானின் தலைவர் எங்கு இருக்கிறார் என்பது எங்களுக்குத் துல்லியமாகத் தெரியும் - அவர் ஒரு இலகுவான இலக்கு, ஆனால் அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்" என்று கூறினார். அவர் தொடர்ந்து, "நாங்கள் அவரை இப்போதைக்கு வெளியேற்றப் (கொல்லப்) போவதில்லை" என்று குறிப்பிட்டார்.
எனினும், டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்தார், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து அதிகரித்து வரும் விரக்தியை சுட்டிக்காட்டினார். பிராந்தியத்தில் தொடர்ந்து வரும் பதட்டங்கள் மற்றும் அண்மைய நிகழ்வுகளைக் குறிப்பிடுவது போல, "எங்கள் பொறுமை குறைந்து வருகிறது" என்று அவர் எச்சரித்தார்.
ஈரானின் அணு ஆயுத மேம்பாடு தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான வழிகளைத் திறந்து வைக்கும் வகையில், காமெனியை படுகொலை செய்வதற்கான இஸ்ரேலிய திட்டத்தை டிரம்ப் அண்மையில் நிராகரித்ததாக வெளிவந்த செய்திகளுக்கு மத்தியில் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.