சிறுபோகச் செய்கையில் மடிச்சுக்கட்டியின் தாக்கம்..!

சிறுபோக செய்கையில் இலை மடிச்சுக்கட்டியின் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலை பின்பற்றவும் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தகவல்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் இலை மடிச்சுக்கட்டியின் தாக்கம் சில பகுதிகளில் இனம் காணப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயராசா தெரிவித்தார்.

கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10800 ஹெக்டேயர் அளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இலை மடிச்சுக்கட்டி நோயின் தாக்கத்தை அவதானித்திருக்கிருக்கிறோம். நெல் இலைகள் பச்சையம் அற்ற நிலையில் இலைசுருண்ட நிலையில் காணப்படும் அதனுள் புழு காணப்படும் அந்த புழுவானது  இலைகளை மடித்து அதனுள் சுமார் 300 வரையான முட்டைகள் இடும்.இம் முட்டைகள் 3 தொடக்கம் 5 நாட்களில் புழுவாக வெளியேறும் அந்த புழுவானது இலைகளைச்சுருட்டி 16நாட்கள் வரை உயிர்வாழும் இது மஞ்சள், பச்சை நிறம் கலந்த புழுவாக காணப்படும். 

விவசாயிகள் வயல்களில் நிழல்களைத்தவிர்ப்பதோடு நைதரசன் உரப்பாவனையையும் குறைக்க வேண்டும். சிபார்சு செய்யப்பட்ட இரசாயனங்களை பயன்படுத்த வேண்டும். விவசாய போதனாசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி பொருத்தமான கிருமி நாசினியை விசுறுமாறு கேட்டுக்கொண்டார்.


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.