இலங்கை உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி, பின்னர் இராணுவத்தால் மீட்கப்பட்டு, பதில் பொலிஸ்மா அதிபர் (ஐஜிபி) பிரியந்த வீரசூரியவிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
தங்கம் மற்றும் வெள்ளி உடைமைகள் இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை மதிப்பீட்டிற்காக தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழுவால் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
அடையாளம் மற்றும் உரிமைச் சான்று கிடைத்தவுடன், பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.