மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

 யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.

பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்த போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது.

இதையடுத்து பொலிஸார் குறித்த டிப்பர்வாகனத்தை, தமது வாகனத்தில் துரத்திச் சென்ற நிலையில் டிப்பர் வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.

இதையடுத்து குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.