யாழ்ப்பாணம், நீர்வேலியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஊரெழு கிழக்கு சுன்ணாகத்தைச் சேர்ந்த செல்வராஜா அனிற்றன் (வயது 29) என்ற இளைஞராவார்.
கடந்த 11 ஆம் திகதி குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னிருக்கையில் இருந்து கொண்டு பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியால் சென்ற போது நீர்வேலிப் பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மேற்படி இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிசார் நெறிப்படுத்தினர்.
