விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம், மேலதிக
சட்ட நடவடிகளுக்காக இன்றையதினம் இலங்கை இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
பதில் பொலிஸ் மாஅதிபரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும் வௌ்ளி என்பனவற்றின் பெறுமதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையூடாக மதிப்பிடப்பட்டதன் பின்னர், அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய மாணிக்கம் மற்றும் நகைகள் அதிகார சபையின் தலைவர் நவீன் சூரிய ஆராச்சி மற்றும் மேஜர் ஜெனரல் தீப்த ஆரியசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.