மஹியங்கனை-பதுளை பிரதான வீதியில் பதுளை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று நேற்று (13) மாலை 5.30 மணியளவில் குருவிதென்ன-தம்பகஹபிட்டிய சந்தியில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
பிபில பகுதியிலிருந்து மிகஹகிவுல பகுதிக்கு பயணித்துள்ள நிலையில் , முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரிடம் வழி கேட்பதற்காக தம்பகஹபிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டுள்ளது
இதன் போதே முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிவதைக் கண்டு அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் தீ அணைக்கப்பட்டதாகவும், முச்சக்கர வண்டியில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.