வான் தாக்குதலில் 90 இற்கும் மேற்பட்டோர் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 90 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில், உள்ளூர் மருத்துவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 93 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலிய படைகள் மிகக் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டன.

இதில், பீட் லாஹியா நகரமும் அதற்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஜபாலியா அகதிகள் முகாமும் இந்தத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக இருந்தன.

இதில், இந்தோனேசிய மருத்துவமனைக்கு குறைந்தது 66 உடல்கள் கொண்டுவரப்பட்டன என  அப்போதைய தகவல்கள் வெளியாகி இருந்தன.

அத்தோடு, தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு மேலும் 16 உடல்கள் கொண்டு செல்லப்பட்டன என  குறிப்பிடப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை கான் யூனிஸ் நகரம் மற்றும் அதைத் தாண்டி வடக்கு திசையில் அமைந்துள்ள டெய்ர் அல் பாலா புறநகர் பகுதிகள் வரை இஸ்ரேலின் வான் வழித் தாக்குதல்கள் நீடித்தன.

இந்தநிலையில், சமீபத்திய தகவல்களின் படி வியாழக்கிழமை காலை முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 250 ஐ தாண்டியுள்ளதாக உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.