சோழன் உலகசாதனை படைத்த 3வயது சிறுமி..!

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும்-தென்மராட்சி மக்களும் இணைந்து முன்னெடுத்த மூன்று வயதுச் சிறுமியான செல்வி ஜெயகரன் தஸ்விகாவின் உலக சாதனை நிகழ்வு 25/05 ஞாயிற்றுக்கிழமை காலை சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஓய்வுநிலை அதிபர் தங்கவேலு தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது 25/05 ஞாயிற்றுக்கிழமை தனது மூன்றாவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் தஸ்விகா

1500தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலப் பதத்தைக் மிக விரைவாகக் கூறி உலக சாதனையை நிலைநாட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார். தனது தாயார் தமிழ்ப் பதங்களைக் கூற அதற்கான ஆங்கிலப் பதங்களை மிக விரைவாகவும்-அதேநேரம் சுலபமாகவும் பதிலளித்து அவர் இந்த உலக சாதனையைப் படைத்திருந்தார்.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைத் தலைவர் ச.க.கண்ணதாஸ் கலந்து சிறப்பித்திருந்தார்

மேலும் சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி இ.அபிராமி,

கௌரவ விருந்தினராக உலக சாதனையாளர் திருச்செல்வம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அதேநேரம் சோழன் உலக சாதனை நிகழ்வுக்கான நடுவர்களாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவன இலங்கைக் கிளை துணைத்தலைவர் நாகவாணி ராஜா,

இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் த.இன்பராசா, 

யாழ்ப்பாண மாவட்ட தலைவர் துரை பிரணவச்செல்வன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத் தலைவர் இ.ஜெயசுதர்சன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

நிகழ்வில் கல்வியலாளர்கள், சமுக சேவையாளர்கள்,சிறுமியின் உறவுகள்,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதன்போது சிறுமியின் திறமையைப் பாராட்டி சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினால் சிறுமிக்கு "மழலை மொழி வித்தகர்" எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.