கெக்கிராவ - நேகம, அலிவங்குவ பகுதியில், நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 3½ வயதுக் குழந்தை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை, தனது வீட்டிற்கு 200 மீற்றர் தொலைவில் உள்ள தனியார் காணியொன்றில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது கழிவுகளை அகற்றுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீர் நிரம்பிய குழிக்குள் மூழ்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சரீரம் நேகம்பஹ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கெக்கிராவ நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு மரண விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.