இலங்கையை உறைய வைத்த விபத்து-மூவர் பலி..!

 நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்துக்கள் இன்று (15) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதன்படி, குருநாகலை - தம்புள்ளை A-6 வீதியில் இன்று அதிகாலை வேளையில் கெப் ஒன்றும் எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகியோர் காயமடைந்து குருநாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் முச்சக்கர வண்டியின் சாரதியும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரும் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்கள் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 37 மற்றும் 43 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்துக்குக் காரணமான கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் குடிபோதையில் வாகனம் செலுத்தியமையும் தெரியவந்துள்ளது. 

இதற்கிடையில், இன்று அதிகாலை காலி - மாத்தறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிர் திசையில் இருந்து வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, கொன்னகஹஹேன வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.