பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் பல்பொருள் அங்காடியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் இந்தியா பஞ்சாபில் மொஹாலியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றின் 4 ஆவது மாடியில் இருந்து அந்த மாணவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இறந்த மாணவர் 17 வயது அபிஜித் என அடையாளம் காணப்பட்டார். தனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
அபிஜித்தின் தந்தை மன்மோகன் சிங், தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த அன்று காலை, தனது மகனுக்கு படிப்பில் கவனம் செலுத்துமாறும், செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்குமாறும் தந்தை அறிவுறுத்தியுள்ளார். இது ஒரு சிறிய வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.
பின்னர் அபிஜித் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். இந்நிலையில் "உங்கள் மகன் இறந்துவிட்டான்" என்ற செய்தியே அவர்களுக்கு கிடைத்துள்ளது.