பாங்கொக்கில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்வைத் தொடர்ந்து அங்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பாங்கொக்கில் 7.7 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
நில அதிர்வின் போது இடிந்து விழுந்த 30 மாடிக் கட்டடத்தில் 43 பேர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை நில அதிர்வு மியான்மாரின் சகாயிங் நகரத்திற்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலாவது நில அதிர்வு பதிவு செய்யப்பட்ட 12 நிமிடங்களுக்குப் பிறகு 6.4 மெக்னிடியூட் அளவில் பின்னதிர்வு பதிவாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.