அளுத்கம நீதித்துறை வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.
இதன்படி துப்பாக்கிதாரியான முன்னாள் இராணுவ கொமாண்டோ மொஹமட் அஸ்மான் ஷரீப்தீன் புத்தளம் பாலாவி பகுதியில் வான் ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்டிருந்த போது இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் நீர்கொழும்பைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியான பெண் சம்மந்தப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு வருட கால திட்டமிடலின் பின்னணியிலேயே இத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறாக துப்பாக்கிதாரி பயன்படுத்திய போலி அடையாள அட்டையின் புகைப்படமும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
