டிக்டொக் செயலி மீண்டும் செயற்பாட்டிற்கு

tiktok banned ! TikTok to Restore Service to U.S. Users Hours After Ban Took Effect TikTok announced on Sunday that it would restore service to U.S.

 அமெரிக்காவில் டிக்டொக் செயலி மீண்டும் செயற்பாட்டிற்கு வந்துள்ளது. நேற்று பிற்பகல் முதல் டிக்டொக் செயற்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  நேற்று முதல் குறித்த செயலிக்கு தடை விதிக்கப்படவிருந்த நிலையில் கடந்த சனிக்கிழமையே தடை அமுல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் டிக்டொக் செயலி மீண்டும் செயற்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரமப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் டிக்டொக் செயற்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டிக்டொக் செயலிக்கு தடை விதித்திருந்த நிலையில் அதற்கு எதிராக அந்நாட்டு  உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில்  டிக்டொக் செயலிக்கான தடை கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்தது.உலகளாவிய ரீதியில் மக்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் இதன்மூலம் சீனா மக்களை கட்டுப்படுத்துவதாகவும் டிக்டாக் செயலி மீது அமெரிக்காவில் கடுமையான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.