ஜனாதிபதி, சீனப்பிரதமர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி, சீனப்பிரதமர் இடையே சந்திப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா அதிகபட்ச ஆதரவை வழங்கும்

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் பீஜிங்கில் சீனப் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் சீனப் பிரதமர் லி கியாங் இதன்போது உறுதியளித்தார். "வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு  ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் தெரிவித்தார்.அத்துடன்  ஊழலற்ற நாட்டை உருவாக்கும் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு சீனப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். வறுமையை ஒழித்து இலங்கையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு சீனப் பிரதமரிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்தல் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கலாசார பரிமாற்றம்இ வர்த்தகம் மற்றும் அரசியல் ஒத்துழைப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.