வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு பல்கலைக்கழக மாணவனால் நேர்ந்த கதி

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு பல்கலைக்கழக மாணவனால் நேர்ந்த கதி

வெளிநாட்டிலிருந்து இருந்து இலங்கை வந்த பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வாடகை வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய, உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட குழு, உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சந்தேக நபரான வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன், அவரின் வாகனமும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *