இன்று ஏப்ரல் 29, 2026 சித்திரை மாதம் 16ம் தேதி புதன் கிழமை, கன்னி ராசியில் உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீன ராசியில் திரிகிரகி யோக பலன் கிடைக்கும் நாள். இன்று கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று பிரதோஷம், மதுரை மீனாட்சி- சொக்கநாதர் தேர் திருவிழா.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதிநிலை, வருமானம் திருப்திகரமாக இருக்கும்; பணம் வரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்று உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான விவாதங்களில் ஈடுபடுவீர்கள். சந்திரன் அமைப்பு காரணமாக பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது பாராட்டு கிடைக்க உண்டு. ஒரு பெண்ணின் உதவியுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான மங்களகரமான வாய்ப்புகள் உருவாகும். காதல் உறவில் ஏற்படும் எந்தவொரு வெளிப்புறத் தலையீடும் உங்களுக்குச் சிக்கலைக் கொண்டு வரலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று, செல்வ நிலை மற்றும் மகிழ்ச்சி பெருகும். உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். வயதில் மூத்தவர்களிடன் அன்பையும், அவர்களின் ஆலோசனையையும் பெறுவீர்கள். வேலையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். குடும்ப வாழ்க்கை இனிமையான நாளாக இருக்கும். இன்று நீங்கள் தேவையற்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டிய நாள். மாலை நேரத்தில் கலை மற்றும் இசையின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம். சிலருக்கு தலைவலி, செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது இடம் மாற்றம் தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும்.இன்று உங்களுடைய வாழ்க்கை தரம் மற்றும் உணவு முறையில் சில முன்னேற்றம் இருக்கும். புதிய மாற்றம் ஆடம்பரமான ஆடைகள் அல்லது ஆபரணம் வாங்கும் விஷயத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். இன்று உங்களுடைய வேலை மற்றும் தொழில் தொடர்பாக ஊழியர்களிடமிருந்து போதையை ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய செயலுக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும் என்பதால் உங்களுடைய சோம்பலை துறந்து சுறுசுறுப்புடன் செயல்படவும்.
கடகம் ராசி பலன்
கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று, நீங்கள் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் ஏற்படும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று சில நபர்களிடமிருந்து சில பரிசுகள் கிடைக்கலாம். நல்ல நண்பர்களின் உங்களுடைய மனதில் உள்ள விரக்தி உணர்வுகள் விலகும். இன்று உங்களுடைய படிப்பு மற்றும் தேர்வு தொடர்பாக விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்பட கூட நாளாகவும், நல்ல தூக்கமும் இன்று கிடைக்கும்.இன்று உங்கள் குடும்பத்தில் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் பெறுவது மகிழ்ச்சியை தரும். நிதி சார்ந்த விஷயங்களில் சற்று கடினமான சூழல் நிலவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டில் ஏற்பாடு செய்த சுப நிகழ்ச்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டு வரும். நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். அதே சமயம் எதிர்பாராத விதமாக சில பெரிய செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய மன உறுதி அதிகரிக்க கூடிய நாள். அஷ்டமஸ்தானத்தில் சனி பகவானின் அமைப்பு காரணமாக சிலருக்கு செரிமானம் மற்றும் மாநில தொடர்பான உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. உணவு பழக்க வழக்கங்களிலும், உடற்பயிற்சி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் நீங்கள் மிகுந்த கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள்; அதன் விளைவாக உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். இன்று தொழில்நுட்பம் மற்றும் எழுதத் துறையில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். இன்று எந்த சூழலிலும் கோபத்தை தவிர்த்து நிதானமாக செயல்படுவது நல்லது. மேற்க கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு சிறப்பான முடிவுகளை பெறுவார்கள். இன்று உங்களுடைய கடின உழைப்பு மற்றும் முன்னர் செய்த முதலீடுகளும் மூலம் சிறிய அளவில் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் சகோதரர்களின் ஆதரவு மற்றும் அனுசரணை நீண்ட நாட்களாக மனதில் இருந்த கசப்புகளை நீக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று, நீங்கள் உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக சில செயல்களை செய்ய நேரிடும். இன்று சிலருடன் மன சங்கடத்தை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். எதிர்பாராத மற்றும் திட்டமிடப்படாத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுடைய பணிகளில் மேலதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கலாம். மாலை நேரத்தில் ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், சந்திரனின் பார்வை பெறுவதன் காரணமாக உங்களுடைய செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் தாய் என் துணையும் ஆசிர்வாதமும் உங்களுக்கு பெரிய அளவில் நன்மை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்தே கிடைக்காமல் இருந்த பணம், ஒரு பெரிய மனிதரின் உதவியுடன் மீட்க வாய்ப்புண்டு. இன்று உங்கள் பிள்ளைகளின் மூலம் சில முக்கிய விஷயங்கள் செய்ய தொடங்குவீர்கள். உங்களுடைய இனிமையான முடிவுகள் புகழை உயர்த்தும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான குரு கிரகம், ராசிக்கு சப்தமஸ்தானத்தில் பத்திர நிவர்த்தி ஆகிய சஞ்சரிப்பது மற்றும் நான்காம் வீட்டில் இருக்கும் சனி பகவானின் சஞ்சாரம், பணியிடத்தில் சில இடர்பாடுகளை சந்திக்க நேரிடும், கூடுதல் உழைப்பையும் ஏற்படுத்தக்கூடும். உங்கள் பேச்சில் நிதானம் கடைப்பிடியுங்கள்; சொத்து தொடர்பான விஷயங்களில் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் சகோதரர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் சில குறுகிய பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நாள்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று கிரகங்களின் அமைப்பு காரணமாக உங்களுக்கு சிறந்த செல்வ வளத்தை அருளக்கூடிய நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டம் மேலோங்கும். உங்களுடைய குடும்பத்திலும் பணியிடத்திலும் புகழ் கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிரிகளால் ஏற்படும் கவலைகள் தீரும்.
இன்று உங்களுடைய சிறப்பான செயல்பாடுகளால் எத்துணை வலிமையான எதிரிகள் இருப்பினும், இறுதியில் வெற்றியையும், புகழையும், மகிழ்ச்சியையும், மங்கல மாற்றங்களையும், உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதையும் நீங்கள் அடைவீர்கள்.காதல் உறவில் ஈகோ மோதல்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும்; இன்று நீங்கள் ஆன்மீக செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் செல்வ வளம் விரைவடையும். வருமானம் பெருகக்கூடிய நாள். இன்று சிலருக்கு அதீத கோபம் பிரச்சனையாக அமைய வாய்ப்பு உண்டு. இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் சொல் மற்றும் செயல்பாடுகளில் நிதானம் தேவை. உங்கள் வாழ்க்கை துணையுடன் கருது வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்தி கவனமாக உங்கள் வேலையை முடிக்க முயற்சிக்கவும்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குக் கலவையான பலன்கள் நிறைந்த நாளாக அமையும். சொத்து வாங்குவது தொடர்பாக முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் வீட்டின் பராமரிப்பு தொடர்பான பணிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு புதிய வருமானம் ஆதாயமாக அமையலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். தொழிலில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முயற்சிகள் மற்றும் முதலீடு செய்வதால் வருங்காலத்தில் பெரிய அளவில் பயனடையவர்கள்.
