அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே இருக்கவும் – இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே இருக்கவும் – இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பிற காரணங்களினால் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மகரந்தப்பருவம் நீடிப்பு மற்றும் மகரந்தத்தின் வீரியம் அதிகரிப்பு காரணமாக சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும்,உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு சுவாசிக்கும் காற்றையும் “கொடியதாக” மாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை போன்ற நாடுகளில் ஆண்டு முழுவதும் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதால், வெப்பநிலை அதிகரிப்பு, ஆண்டின் பெரும்பகுதிக்கு தாவரங்களை மகரந்தத்தை உற்பத்தி செய்யத்தூண்டுகிறது.

இதன் காரணமாக, ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டு முழுவதும் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகரங்களில் அதிக அளவு காற்று மாசுபாடு உள்ளதுடன்,காற்று மாசுபாடுகள் மகரந்தத்துடன் சேரும்போது, ​​ஒவ்வாமையை ஏற்படுத்தும் மகரந்தத்தின் திறன் பல மடங்கு அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இலங்கை வாழ் மக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​ஆஸ்துமா அல்லது சளி உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

மருந்துகளைப் பயன்படுத்துதல்: ஒவ்வாமை உள்ளவர்கள், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, மருத்துவர் பரிந்துரைத்தபடி ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

அதிக மகரந்தம் உள்ள காலங்களில் வெளியே சென்றால், N95 வகை முகக்கவசத்தை அணியலாம்.

மேலும், மகரந்தம் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க ஜன்னல்களை மூடி வைக்கவும், முடிந்தால் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தவும்.

ஏதேனும் சுவாசச்சிரமங்கள் இருந்தால், அதனை சளி என்று புறக்கணிக்காமல், வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் உடல்நலப் பழக்கவழக்கங்களை மாற்றுவது அவசியம்.

மழை நாட்களில் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *