நாணய மாற்று வீதங்களில் காணப்படும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இந்த மாதத்தில் விற்பனை செய்யப்படவுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள் வருமாறு:
- 12.5 கிலோ கிராம் (வீட்டு உபயோகம்) – ரூ. 4,465
- 5 கிலோ கிராம் – ரூ. 1,792
- 2.3 கிலோ கிராம் – ரூ. 835
கடந்த மாதங்களில் நிலவிய விலைகளே இந்த மாதமும் தொடர்ந்து செல்லுபடியாகும் என லிட்ரோ நிறுவனம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
