சமூக வலைத்தளங்களில் பூனை ஒன்றைத் துன்புறுத்திய காணொளி தொடர்பில் இரு சந்தேகநபர்கள் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை விலங்கு நலக் கூட்டமைப்பின் முறைப்பாட்டினை தொடர்ந்து, அதுல்கம பகுதியில் வைத்து 18 மற்றும் 19 வயதுடைய அப்பகுதியைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இடம்பெற்றுள்ளதாகச் சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தண்டனைச் சட்டக்கோவை, பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் விலங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
