பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, *நாளை 10.08.2026 மற்றும் நாளை மறுதினம் 11.08.2026* ஆகிய இரு தினங்களும் கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளனர்.
*என்ன கோரிக்கை?*
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட *கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க* இதனை தெரிவித்தார்.
தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் *600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்தப்படவில்லை* என அவர் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டில், இந்த கொடுப்பனவுக்கு பதிலாக *20 லீட்டர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை* வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.
ஆனால் இதுவரை அந்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தலைவர் கூறினார்.
*எவ்வாறு பாதிப்பு?*
இந்த பணிப்புறக்கணிப்பு *நாடளாவிய ரீதியில்* முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனால் வரும் 2 நாட்களும் கிராம மட்ட சேவைகள், சான்றிதழ் வழங்கல், காணி தொடர்பான வேலைகள் உள்ளிட்ட பல சேவைகள் தாமதமாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.
*தொழிற்சங்கம் கோருவது*
உடனடியாக 20 லீட்டர் எரிபொருளுக்கு நிகரான பயணக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
முக்கிய சேவைகளுக்கு கிராம உத்தியோகத்தரை அணுக உள்ளவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவும்.
