போலி நாணயத்தாள்-ஒருவர் கைது

 

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டே வீதிப் பகுதியில் அமைந்துள்ள தொடர்பாடல் மையம் ஒன்றில், மேல் மாகாண தெற்கு திசை குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, போலியாக அச்சிடப்பட்ட நாணயத்; தாள்கள் மற்றும் அவற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நீண்ட காலமாக இவ்வாறு போலி நாணயத்தாள் அச்சிடும் பணியை மேற்கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து 

போலியான 5,000 ரூபாய் நாணயத்தாள்கள்; 07, 

1,000 ரூபாய் நாணயத்தாள்கள்: 06


500 ரூபாய் நாணயத்தாள்: 01


கணினி  01


ஸ்கேனர் 01


பிரிண்டர் 01


பென் டிரைவ் 01


பேப்பர் கட்டர் 01


அச்சு மற்றும் அளவுகோல் 01

ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று அன்று நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

இச்சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment