யோஷித ராஜபக்ஷ மேல் நீதிமன்றத்தில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, கடற்படையில் இணைக்கப்பட்டமை மற்றும் பிரித்தானியாவில் சிறப்புப் பயிற்சி பெற்றமை தொடர்பான வழக்கில் இன்று (13) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடற்படையில் இணைவதற்குத் தேவையான கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், அவர் கடற்படையில் இணைக்கப்பட்டு வெளிநாட்டில் பயிற்சி பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆட்சேர்ப்பு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment