சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! இந்த வாரம் முக்கிய முடிவு

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக இந்த வாரத்திற்குள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்தனர்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்ல எதிர்க்கட்சி தயாராகி வருவதால், வரவிருக்கும் வாரம் சபாநாயகருக்கு ஒரு முக்கியமான வாரமாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், இந்தப் பிரேரணை தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இந்த வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Post a Comment