சற்றுமுன்னர் ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று காலை சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘சிரிலிய சவிய’ அமைப்பின் கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment