டுபாயிலிருந்து வந்த பயணியிடம் சிக்கிய பொருள் கட்டுநாயக்கவில் அதிர்ச்சி

டுபாயிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட தங்கம் அடங்கிய பார்சல்களை வெளியே கொண்டு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, பல்லேகல பகுதியைச் சேர்ந்த 51 வயதான தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் நேற்று (03) காலை 9.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமான EK-650 மூலம் விமான நிலையத்தை வந்தடைந்ததாக தமிழ் பிளஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், குறித்த சந்தேகநபரைச் சோதனையிட்டபோது, அவரது உடலில் 4 பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 996 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களைக் கைப்பற்றி அவரைக் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் மதிப்பு 36.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட தங்கமும் மேலதிக விசாரணைகளுக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இன்று (04) அதிகாலை 4.45 மணி வரை இடம்பெற்ற சுங்க அதிகாரிகளின் விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பயணிக்கு 3.7 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment