ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கோட்டாபயவின் மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் வகையில் கோட்டாபய ராஜபக்ஷ கோரிய நீதிமன்ற உத்தரவு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment