வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைத்துள்ளது.
குறைக்கப்பட்ட சம்பளத்திற்கு எதிராகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவன நிர்வாகத்துடன் அவசரக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பலனாக, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,750 முழுமையான தினசரி சம்பளத்தையும் வரும் 25ஆம் திகதிக்குள் கணக்கிட்டு வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், மூடப்பட்டுள்ள எல்பியன் தேயிலைத் தொழிற்சாலையை வரும் நவம்பர் 15ஆம் திகதிக்குள்ளும், வெவர்லி தொழிற்சாலையைத் தேவையான தேயிலைக் கொழுந்தைப் பெற்று விரைவிலும் மீளத் திறக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என ஜீவன் தொண்டமான் இதன்போது கண்டிப்புடன் சுட்டிக்காட்டினார்
