சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச! ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்

ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலாம் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் சிறப்புப் பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக பல்லியகுருகே தெரிவிக்கையில், "பெண்கள் பிரிவுக்குள் உள்ள பாதுகாப்பான பகுதியில் அவரைத் தட்டுப்பாடின்றி தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

மேலும், நீதிமன்ற உத்தரவுக்கமைய அவருக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள்தாம் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான வங்கி ஒன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) ஷிராந்தி ராஜபக்ச ஒக்டோபர் 7ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து, அவரை அக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 அத்துடன், மருத்துவ சிகிச்சைக்காக அவரை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post a Comment