கொழும்பு துறைமுக சீன நபர் கொலை-மேலும் ஒருவர் கைது

 

கொழும்பு துறைமுக நகரில் வைத்து சீன நாட்டைச் சேர்ந்த சிலர், மூன்று சீன பிரஜைகளை கடத்திச் சென்று ஒருவரைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2026.07.23 அன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (04) கொழும்பு துறைமுக நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 54 வயதுடைய சீன பிரஜை ஆவார்.

Post a Comment