தமிழ் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

 

சென்னைக்கு அருகிலுள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்து அவரது உடலை ஆக்ராவிற்கு பொதி செய்து அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உறைந்துபோகச் செய்துள்ளது.

 திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் பகபதி மாஜி ஆகிய தம்பதியினர் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட பெண் தூங்கிக் கொண்டிருக்கும்போது முகத்தில் மயக்க மருந்து தெளித்து, பின்னர் அவரது கழுத்தை அறுத்து அவர்கள் இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

கொலை செய்ததன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த இரத்தம் முழுவதையும் பிரியாணி அண்டாவில் வடியவிட்ட அவர்கள், உடலை மின்விசிறியில் தலைகீழாகத் தொங்கவிட்டு சமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அந்தப் பெண்ணின் தலைமுடியை மொட்டையடித்து, இரண்டு கண்களையும் பிரித்து எடுத்துவிட்டு, உடல் பாகங்களைச் சூட்கேஸில் அடைத்து ஆக்ராவிற்கு அனுப்பி வைத்ததாகக் காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது.  



Post a Comment