சுகுணன் தொடர்பில் அர்ச்சுனாவிற்கு இனி வாய்திறக்க முடியாது



வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் நீதிமன்றம் உத்தரவென்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி குறித்த 6 பேரும் வழக்கு நிறைவடையும் வரை வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post a Comment