ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இவர் சற்று முன்னர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முற்பகல் 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய அவர் முன்னிலையாகியுள்ளார்.
அவர் ஆணைக்குழுவின் முன்பு முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
