நீல நிற அறிவிப்பு - கைதாவாரா பசில்
மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக, 'நீல நிற அறிவித்தல்' விடுக்குமாறு சர்வதேச பொலிசாரை கோருமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளும் இதற்குள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.