பங்குச் சந்தை வழக்கில் உதய கம்மன்பில விடுதலை! “தர்மமே இறுதியில் வெல்லும்”

அவுஸ்திரேலிய தொழிலதிபரின் நிறுவனப் பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையின்றி விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், ஒரே சம்பவத்தை இரண்டாகப் பிரித்துத் தம்மை அரசியல் ரீதியாக அசௌகரியப்படுத்தத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளிலிருந்தும் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தில் பொய் சாட்சியமளித்ததை ஒப்புக்கொண்ட நிலையிலும் அரசாங்கம் வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்ததாகச் சாடிய அவர், 'தர்மமே இறுதியில் வெல்லும்' எனக் குறிப்பிட்டார்.

இந்த அரசியல் பழிவாங்கல் வழக்கினால் 11 ஆண்டுகள் வேதனையையும் 13 நாட்கள் விளக்கமறியலையும் அனுபவித்ததாகக் கூறிய அவர், தமக்கு இலவசமாகச் வாதாடிய சட்டத்தரணிகளுக்கும் நீதிபதிக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், சட்டத்தை அதிகாரிகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் 'எனது முறைப்பாடு' என்ற தலைப்பில் விரைவில் புத்தகமொன்றை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தார்.

Post a Comment