துபாயில் இருந்து உரிமம் இன்றி சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க நகைகளைக் கொண்டுவந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) வெளியேற முயன்ற 38 வயதுடைய இலங்கை தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ர. 36,628,937.27 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அங்கொட, ஹல்கஹதெனிய வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் தொழிலதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வைத்திருந்த பையில் (Backpack) 12 பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 916 கிராம் எடையுள்ள தங்கக் காப்புகள் மற்றும் சங்கிலிகள் சோதனையின் போது கையகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர் நேற்று (28) காலை 7:30 மணியளவில் துபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-226 விமானம் மூலம் BIA விமான நிலையத்தை அடைந்துள்ளார்.
கைதான பெண் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்று காலை (29) சுங்க அதிகாரிகள் நகைகளின் மதிப்பை ரூ. 36,628,937.27 என மதிப்பீடு செய்து, அவற்றை அரசுடைமையாக்கியதுடன், அந்தப் பெண்ணுக்கு ரூ. 250,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.