யாழில் மூவர் கைது

 

யாழ்ப்பாணம், குடாரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற மூவரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்;கேணி கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கடற்கரைப் பகுதியில் அவதானிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனையிட்ட போது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டு தரையிறக்க முயன்ற 673 கடல் அட்டைகள்  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

51 மற்றும் 56 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், கடல் அட்டை, அதற்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Post a Comment