திருகோணமலை மாவட்ட தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலாகாமம் கிண்ணியா பிரதான வீதியில் எருமை மாட்டுடன் வேன் மோதிய சம்பவம் ஒன்று நேற்றிரவு பதிவாகியுள்ளது.
நேற்ற (23) இரவு சுமார் 11 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன், முள்ளியடி பகுதியில் எருமை மாட்டுடன் மோதுண்டுள்ளது.
இதில் வேன் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த விபத்தில் சிக்கிய எருமை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.