சற்று முன்னர் கடமையை ஆரம்பித்த சி ஐ டி - ஒருவர் கைது
குற்றவியல் புலனாய்வுத் துறையினரால் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக்கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீ ஐ டியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (17) குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள வளாகத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சி ஐ டி யின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
