சவூதியில் வெளிநாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்படும்.
சவூதி பத்திரிகைகளில் அரசு அதனை வெளியிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை அப்படியே நம்பி செயற்படுவதற்குப் பதிலாக உண்மையைக் கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
'சவூதி அரேபியா சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் ஒரு நாடாகும். மன்னர் பைசலை படுகொலை செய்த சவூதி அரச குடும்பத்து இளவரசனுக்கே அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா விடுத்த கோரிக்கையையும் சவூதி பொருட்படுத்தவில்லை.
அங்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டால் அடுத்த வாரமே பத்திரிகைகளில் அரசு அறிவிக்கும். ஆனால், அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகத் தகவல்கள் இல்லை. இவ்வாறான சூழலில், அனைவரும் சேர்ந்து அதிகளவில் சத்தமிடுவது விபரீதமான முடிவுகளுக்கே வழிவகுக்கக்கூடும்' என அவர் எச்சரித்துள்ளார்.
.png)