பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருகம்பை - சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி படுகாயமடைந்துள்ளார்.
நேற்று(28) மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உடனடியாக மீட்கப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அருகம்பை மற்றும் சின்ன உள்ளை ஆகிய பகுதிகள் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக விளங்குவதோடு, தினசரி ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பகுதிகளாகவும் காணப்படுகின்றன.
இத்தகைய மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு மற்றும் சுற்றுலா மண்டலங்களுக்குள் அண்மைக்காலமாகக் காட்டு யானைகளின் வருகையும் நடமாட்டமும் அதிகரித்துள்ளமையினால் அப்பகுதியில் பெரும் அச்சநிலை நிலவுகின்றது.