சற்று முன் இலங்கையின் பிரபல நகையகம் ஒன்றில் பற்றி எரியும் தீ

 வத்தளை - மாபாகே பகுதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றி தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அத்துடன் இந்த தீவிபத்தினால் இதுவரை எவருக்கும் உயிர்சேதம் இல்லை என்பதோடு, தீக்கிரையான உடமைகள் தொடர்பில் விபரங்கள் வெளியாகயவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment