காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை வடக்குக்கு மட்டும் உரியதல்ல, அது தெற்கில் உள்ளவர்களையும் பாதிக்கும்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை வடக்குக்கு மட்டும் உரியதல்ல, அது தெற்கில் உள்ளவர்களையும் பாதிக்கக்கூடிய ஒரு தேசியப் பிரச்சினையாகும்.

சட்டம் அனைவருக்கும் சமமானது என்றும், பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நீதி வழங்கப்படுவதுடன், மக்களின் ஆணை மீறப்படாது என்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

செம்மணி அகழ்வுப் பணிகளுக்காக சுமாராக 57 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், உண்மையை கண்டறியும் செயற்பாடுகள் நிதிக் காரணத்திற்காக நிறுத்தப்பட மாட்டாது.

காணாமல் போனோர் அலுவலகத்தில் நிலவிய உத்தியோகத்தர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மீது அடுத்த ஆண்டுக்குள் கூடுமானவரை விசாரணைகள் முடிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Post a Comment