குருணாகல், வெலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 48 வயது பெண் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் நேற்று மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பகோட்டே பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் முதற்கட்ட விசாரணையில், பெண்ணின் 50 வயது கணவரே கூர்மையான ஆயுதத்தால் தாக்கியது தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
