கொட்டாவை - மாக்கும்புர போக்குவரத்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட தென்மாகாணம் மாகாணம் செல்வதற்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான பிரதான பஸ் மத்திய நிலையம் மாக்கும்புர ஆகும்.
பாடசாலை விடுமுறை என்பதாலும், பௌர்ணமி விடுமுறை மற்றும் வர்த்தக விடுமுறை ஆகிய காரணங்களால் பெருந்திரளான பயணிகள் நிரந்தர வசிப்பிடங்களுக்கு செல்கின்றனர்.
இந்த நிலையிலேயே மாக்கும்புர பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய பயணிகள் சுமார் ஒரு கிலோமீற்றருர் தூரம் வரை காத்திருப்பதாகவும், எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் தென் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்துக்காக பேருந்து சேவையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அதற்காக தென் அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிக்கும் வாகனங்களின் கொள்ளளவு தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது வரை பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை வழமையை விட அதிகரித்துள்ளமையினால் சடுதியாக பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
